தர்மபுரி அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது: துப்பாக்கி சூட்டில் வனத்துறையினர் 2 பேர் படுகாயம்..!

 தர்மபுரி அருகே மான் வேட்டையாடிய  இருவர் கைது: துப்பாக்கி சூட்டில் வனத்துறையினர் 2 பேர் படுகாயம்..!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே இராமியம்பட்டி கவரமலை காட்டுபகுதியில் அதிகாலை மொரப்பூர் வனவர் வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மான் வேட்டையாடிக் கொண்டிருந்த நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சுட்டதில் வேடியப்பனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதேபோல குமாருக்கு கால் தொடையில் காயம் ஏற்பட்டு இருவரும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்..

News Express Tamil

Related post