கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கிய இருவர் கைது

 கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கிய இருவர் கைது

கோவை வெரைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் (24) .இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார் . இவரது குடியிருப்பின் அருகில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கார்த்திக் அவர்களை பொது இடத்தில் அமர்ந்து மது அருந்த கடாது என எச்சரித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து நேற்று இரவு கார்த்திக் தனது வீட்டின் அருகில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மாலையில் மது அருந்தி எச்சரித்த நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் கார்த்திகை தாக்கத் துவங்கினர். அருகிலிருந்த கற்களை எடுத்து கார்த்திக்கின் முகத்தில் வீசி எறிந்தனர் .இதில் கார்த்திக்கிற்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து கார்த்திக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்த புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் நாகராஜ் (37) மற்றும் மதுரை வீரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!