திருடர்களிடமே திருடிய பலே திருடன்..!

 திருடர்களிடமே திருடிய பலே திருடன்..!

திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. 47 வயதான இவர் சொந்தமாக பனியன் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குடோனுக்கு சென்று வேலை பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். அதே போல் சென்றிருந்த நாளில் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.8,29,000/- கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் திருப்பூர் ஜோதிநகரை சேர்ந்த அருண்குமார், பவானி நகரை சேர்ந்த அபிஷேக் மற்றும் சூர்யா மூவரும் தான் மாயாண்டி வீட்டில் பணத்தை திருடியதாக ஒத்துக் கொண்டனர். அந்த பணத்தை ஊத்துக்குளி ரோடு ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் புதைத்து வைத்து தேவைப்படும் அளவு எடுத்து செலவழித்து வந்துள்ளனர்.
இவர்கள் 3 பேரையும் கைது செய்து பணம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை. மர்ம நபர்கள் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் நண்பரான போயம் பாளையம் மும்மூர்த்தி நகரை சேர்ந்த ரவீந்தர் இந்த பணத்தை எடுத்திருக்கலாம் என சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3பேரும் பணத்தை புதைப்பதை நோட்டமிட்ட ரவீந்தர் அந்த பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியதுடன், பெங்களூர் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கி விதவிதமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2,00,000/- பணம், தங்க செயின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

News Express Tamil

Related post