உரிமையாளர் ஊருக்கு சென்ற சமயத்தில் கோவையில் கடையை அபகரித்து மோசடி

 உரிமையாளர்  ஊருக்கு சென்ற சமயத்தில் கோவையில் கடையை அபகரித்து மோசடி

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் சாலை காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மகன் பாலசுப்பிரமணி (40 ). திருச்சி பூர்வீகமாக கொண்ட இவர் எம் எஸ் ஐ டி படித்து டேலி அக்கவுண்டிங் சாப்ட்வேர் சர்வீஸ் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் ஸ்ரீ சாய் காம்ப்ளக்சில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். இதற்காக கட்டிட உரிமையாளர் பிரபா சுப்பிரமணியத்திடம் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். மேலும் மாத வாடகை 7,500 ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தமும் செய்து கொண்டார் .தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்து திருச்சி தலைமையிடமாக கொண்ட வேதா பால் நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுத்து நடத்தத் துவங்கினார். அந்த சமயத்தில் இவரது கடையில் தனஸ்ரீ என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தனஸ்ரீ ஏற்கனவே காந்திபுரம் பகுதியில் ஒரு ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் வேலை செய்தபோது பண மோசடியில் ஈடுபட்டு இருந்த விபரம் பாலசுப்பிரமணியதிற்கு தெரியாது. இந்நிலையில் திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி கோவை ரத்தினபுரி போலீசார் பாலசுப்ரமணியத்தின் கடைக்கு வந்து தனஸ்ரீ யை  கைது செய்து சென்றனர். கடையில் வரவு செலவுகளை பார்த்துவந்த தனஸ்ரீ ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பாலசுப்பிரமணியத்தின் வங்கி கணக்கு மூலம் ஷேர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் இருந்து மோசடியாக பெற்ற விபரம் பாலசுப்பிரமணியத்துக்கு தெரியாமல் இருந்தது. தனஸ்ரீ கைதுசெய்த ரத்தினபுரி போலீசார் பாலசுப்பிரமணியத்தின் வங்கி கணக்கிலும் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதால் பாலசுப்பிரமணியத்தின் பெயரையும் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துவிட்டனர். மேலும் ரத்தினபுரி போலீசார் தனஸ்ரீ மோசடியாக ஷேர் மார்க்கெட் வாடிக்கையாளர்கள் மூலம் பாலசுப்ரமணியன் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக குறிப்பிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என பாலசுப்ரமணியம் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட் டு இருந்தது.  இதையடுத்து பாலசுப்ரமணியன் தான் நடத்திவந்த பால் கடையை தற்காலிகமாக மூடிவிட்டு

 சொந்த ஊருக்கு சென்று வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக  இருந்தார். சுமார் ஒரு மாதம் கழித்து வழக்கில் முன் ஜாமீன் கிடைத்தவுடன் கோவைக்கு திரும்பிய பாலசுப்பிரமணி யத்துக்கு தனது கடை திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .அங்கு சென்று பார்த்த பொழுது கட்டிட உரிமையாளர் பிரபா சுப்ரமணியம் கடையின் பூட்டை உடைத்து பால் வியாபாரத்தை நடத்தி வந்தது தெரியவந்தது .இதுகுறித்து கட்டிட உரிமையாளர் பிரபா சுப்பிரமணியத்திடம் பாலசுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரபா சுப்பிரமணியன் உன் மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு வா ,அப்போதுதான் கடையை தரமுடியும். மேலும் இந்த கடைக்கும் உனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அங்கிருந்து துரத்தி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியம் இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் இடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாடகைக்கு விட்ட கடையை வாடகைதாரருக்கு  தெரியாமல் அபகரித்த தோடு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபா சுப்பிரமணியன் அவரது கணவர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post