14 வயது சிறுமியை, சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 14 வயது சிறுமியை, சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் நிலையிலும் அவர்கள் மீது உரிய தண்டனை வழங்கப்படாததால் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த சிறுமி, தான் பள்ளியில் படிக்கும்போதே அந்த சிறுவனுடன் பழகி வந்துள்ளார். சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்த சிறுவன், சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர். சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

News Express Tamil

Related post

error: Content is protected !!