கோவை: காதலி செல் போனில் பேசாததால் காதலன் தற்கொலை

 கோவை: காதலி செல் போனில் பேசாததால் காதலன் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பலூர் பக்கம் உள்ள கசவனூரைச் சேர்ந்தவர் பிச்சை என்பவரின மகன் கண்ணன் (24) . இவர் கோவை வடவள்ளி லட்சுமி நகரில் தங்கியிருந்து டிரைவர் வேலை பார்த்து வந்தார். இவர் தன் அண்ணன் மனைவியின் தங்கையை காதலித்து வந்தாராம். அவருக்கு பெற்றோர்கள் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிரு தனர். அதில் இருந்து அந்த பெண் கண்ணனிடம் செல்போனில் பேசுவதில்லை. இதனால் மனம் உடைந்த கண்ணன் நேற்று தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது அண்ணன் சுரேஷ்குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News Express Tamil

Related post

error: Content is protected !!