மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
வழிபாடு தலங்களில் தைப்பூச விழா;பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை:பழநி தைப்பூச திருவிழா, இன்று ஜன., 12 துவங்கி ஜன., 21 வரை நடக்கிறது. ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும். திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள் நடத்தப்படும்.சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெறும். ஜன., 21ல் தெப்ப உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெறும். திருவிழா நிகழ்வுகள்கோவில் வலைத்தளம், யூடியூப் சேனல் வாயலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.