கோவையில் இரண்டு பெண்களிடம் பத்து பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

 கோவையில் இரண்டு பெண்களிடம் பத்து பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கோவையில் நேற்று இரவு இரு வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 10 பவுன் தங்க செயின் பறித்த திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை கெம்பட்டி காலனி ஐயா சாமி கோவில் வீதி பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய மனைவி புஷ்பா (58), இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுவாசலில் நடந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளை கலர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து மாஸ்க் அணிந்து வந்த இருவர் கழுத்தில் போட்டிருந்த நாலே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அவர்கள் மாயமாய் மறைந்தனர். இது குறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதேபோல கோவை சுந்தராபுரம், சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்ராஜ் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜ செல்வி (50), இவர் நேற்று இரவு மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜர் நகர் ஜங்சன் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த பெண் கழுத்தில் போட்டிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். அப்பொழுது அந்தப் பெண் செயினை பறிக்க விடாமல் இறுக பற்றிக்கொண்டாள். இதில் இருவருக்குள்ளும் கடுமையான போராட்டம் ஏற்பட்டது. கடைசியில் அந்தப் பெண்ணிடம் 2  தங்க நகை  பாதி சிக்கியது. 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தன. இதுகுறித்து போலீசில் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இரண்டு சம்பவங்களும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!