மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் செல்லும்;உயர் நீதிமன்றம் உத்தரவு!

மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய, `தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்ற பாடலின் ஒரு பகுதியையே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு கொண்டுள்ளது
ஆனால், இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய முழுப் பாடல் அல்ல, 1970-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் சில வரிகளை நீக்கி திருத்தம் செய்யப்பட்ட பாடல். இந்தத் திருத்தம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மாநிலத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு மோகன்ராஜ் என்பவரால், மு.கருணாநிதி திருத்திய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திருத்தம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி கேசவேலு கொண்ட அமர்வு, 37 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரப்பட்ட இந்த வழக்கு செல்லாது என உத்தரவிட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், இத்தனை ஆண்டுகள் பாடப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே இனியும் தொடரும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உண்டு போன்ற வாதங்களையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.