மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கணவன் செய்த கொடூரம்- பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

 மனைவியின் நடத்தையில் சந்தேகம்:   கணவன் செய்த கொடூரம்- பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

கோவை மாவட்டம்:
பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலதி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் மாலதி நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தனது மனைவியை தாக்கினார்.
பின்னர் விஷத்தை மாலதி வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாலதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றிய செந்தில்குமாரை வடக்கிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!