கோவையில் கள்ளக்காதலியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

 கோவையில் கள்ளக்காதலியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

கோவையில் கள்ளகாதல் விவகாரத்தில் பெண்ணை தாக்கி பைக்கிற்க்கு தீ வைத்த சப் -இன்ஸ்பெக்டரை சஸ்பென்ட் செய்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுத்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் -ஒழுங்கு பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பார்த்திபன் ( 55). இவருக்கும் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த அபிநயா (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அபிநயா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை உழவர்சந்தையில் வேலை செய்கிறார். இந்த நிலையில் பார்த்திபன், அபிநயாவிற்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் பார்த்திபன் ரூ.3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை அபிநயாவிற்கு வாங்கி கொடுத்து உள்ளார்.
சம்பவத்தன்று அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சப் -இன்ஸ்பெக்டர் பார்த்திபன், அபிநயாவை சரமாரியாக தாக்கி உள்ளார். உழவர் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அபிநயாவின் தந்தையின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் சப் -இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோவை மாநகர சட்டம் -ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன், சப் -இன்ஸ்பெக்டர் பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

News Express Tamil

Related post