கோவையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோத எச்சரிக்கை: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

 கோவையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோத எச்சரிக்கை: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

கோவை, சூலூர் அடுத்த அரசூர் ஊராட்சியில் கொரோனா நோய் தொற்று மிக கடுமையாக உள்ளது அங்கு கடந்த வாரங்களில் தினசரி 300 பேருக்கு மேல் நோயினால் பாதிக்கப்பட்டு தினசரி உயிர் இழப்பும் அதிகமாக இருந்தது வந்தது. இந்நிலையில் நேற்று அரசூர் சாலையோர பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களை ஊராட்சி நிர்வாகம் கடுமையாக எச்சரித்தனர். இதனையடுத்து அரசூர், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்து உள்ளனர் அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ,
ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்று முகக் கவசம் அணியாமல் வந்தால் மற்றவர்களுக்கும் அவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பதையும், மயானத்தில் புதைக்கக் கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இதனை கவனத்தில் கொண்டு கட்டாய முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இது பொதுமக்களிடையே அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் முகக் கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக இந்த வினோத முறையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தலாம் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதனையடுத்து மற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சென்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!