தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்கள் பறிமுதல்: துபாய் சிறப்பு விமானம் வந்த இளைஞர் கைது

 தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்கள் பறிமுதல்: துபாய் சிறப்பு விமானம் வந்த இளைஞர் கைது

துபாயிலிருந்து பிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த வாலிபர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாமீனோ ஜேசையா (26) என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியதும் தெரிய வந்தது. அவருடைய உடமைகளை முழுமையாக சோதனையிட்டதில் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் பெல்ட்டுக்கு அடியில் தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்கள் இருப்பது தெரிந்தது. அதனை கைப்பற்றினர். அதன் மொத்த எடை ஒரு கிலோ 250 கிராம். அதன் சர்வதேச மதிப்பு 63.2 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினர் பயணி சாமீனோ ஜேசையாவை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

News Express Tamil

Related post