100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல் : வெளிநாட்டு பயணிகள் 2 பேரை சென்னை விமான நிலையத்தில் கைது

 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல் : வெளிநாட்டு பயணிகள்  2 பேரை சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பெர்க் நகரில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வெளிநாட்டு 2 பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களது சூட்கேசில் 15.6 கிலோ அளவிலான ஹெராயின் போதை பொருளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக தான்சானியாவை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருன்றனர். சென்னை விமான நிலையத்தில் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News Express Tamil

Related post