தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது

 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கருமத்தம்பட்டி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அரவிந்த ராஜன் தலைமையில் சோமனூர் பகுதியில் உள்ள மகா சக்தி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனை மேற்கொண்ட போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 300 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை விற்பனைக்காக வைத்திருந்த கடை ஊழியர்கள் ஜிதேந்திரா குமார், தர்வேஷ் முகைதீன் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் மோதிலால் அறிவுறுத்தல் பேரில் தொடர்ச்சியாக தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி சோமனூர் கருமத்தம்பட்டி பகுதி உள்ள சிறுசிறு கடை களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் மோதிலை போலீசார் தேடி வருகின்றனர்

News Express Tamil

Related post

error: Content is protected !!