கோவைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

 கோவைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

கோவை, சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியில் சூலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது சந்தேகத்துக்கிடமான வகையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர் அப்பொழுது காரின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த சூட்கேசில் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது,

பின்னர் அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கோவை, சௌரிபாளையம் பகுதியை சேர்ந்த சுதாகரன் (41) என்பதும் கோவை பகுதியில் சுயதொழில் செய்து வருவதும் தெரியவந்தது இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக வாங்கபட்டதா? அல்லது சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டதா? என்பது குறித்து சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Express Tamil

Related post