கோவையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கத்திகுத்து: மோசடி மன்னன் கைது

 கோவையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கத்திகுத்து: மோசடி மன்னன்  கைது

கோவை கணபதி அடுத்த ஆறு புளியமரம் பகுதியைச் சேர்ந்த வேலு தேவர் என்பவரின் மகன் குணசேகரன் (64 ).இவர் பைனான்சியர் என்று கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி முன் பணம் பெற்று மோசடி செய்வதில் கைதேர்ந்தவர். இவர் மீது தமிழகம், கேரளா முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வடவள்ளி அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனஜா என்ற பெண் மோசடிப் பேர்வழி குணசேகரன் இடம் 54 லட்சம் ரூபாய் பணமும் முப்பது பவுன் தங்க நகைகளையும் கொடுத்து வைத்திருந்தார். அதற்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி வாங்கிய குணசேகரன் பணத்தையும் தராமல் வட்டியும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்த வனஜா மற்றும் அவரது சகோதரர் ஜஸ்டின் ஆகியோர் நேற்று குணசேகரன் அவரது வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தையும் நகையையும் கேட்டனர். அதற்கு குணசேகரன் பணம் மற்றும் நகைகளை கொடுக்க முடியாது என்று கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் குணசேகரன் அவனது மகன் செந்தில்குமார் (38) ஆகியோர் இணைந்து வனஜா மற்றும் அவரது சகோதரர் ஜஸ்டினை தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கு இடையே தாக்குதல் முற்றி கைகலப்பு ஆனது. மேலும் செந்தில்குமார் கத்தியால் ஜஸ்டின் மற்றும் அவரது சகோதரி வனஜாவை குத்தினார். இதில் ஜஸ்டின் மற்றும் அவரது சகோதரி வனஜாவுக்கு தலை மற்றும் கைகளில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது .இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து ஜஸ்டின் அளித்த புகாரின் பெயரில் மோசடி மன்னன் குணசேகரன் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post