வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த சேலம் நபர் கைது..!

 வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த  சேலம் நபர் கைது..!

கோவை : வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, பணத்தை மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . கோவை, துடியலூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வெளிநாடு வேலைக்கு செல்ல, (ஓ.எல்.எக்ஸ்) வலைதளத்தில் தேடியுள்ளார். அதில், தினேஷ் என்பவரது மொபைல் எண் கிடைத்துள்ளது.தினேஷை மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, வெளிநாட்டிற்கு செல்ல மருத்துவ சான்று பெற வேண்டும் என, தினேஷ் கூறியுள்ளார். மருத்துவ சான்று பெற்ற முத்துக்குமார், மீண்டும் தினேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, விமான டிக்கெட் கட்டணமாக, 5,000 மற்றும் விசா, கூரியர் கட்டணமாக, 27,633 ரூபாய் செலுத்த வேண்டும் என, தினேஷ் கூறியுள்ளார். முத்துக்குமார், தினேஷின் மொபைல் எண்ணிற்கு ஆன்லைன் (கூகுள் பே) மூலம் 32,633 ரூபாய் அனுப்பியுள்ளார்.அதன்பின், தினேஷின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமார், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியை சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Source:

News Express Tamil

Related post