வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடியை பட்டப்பகலில் கொள்ளை

 வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடியை பட்டப்பகலில் கொள்ளை

பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் ஜாதுவா நகர் பகுதியில் ஹெச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு முகமூடி அணிந்த நான்கு பேர், மோட்டார் பைக்கில் இன்று காலை 10.30 மணிக்கு வந்தனர். திடீரென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், சுற்றும் முற்றும் பார்த்தனர். வங்கியில் வாடிக்கையாளர்கள் உட்பட 10 பேர் இருந்தனர்.

கொள்ளையர்களை கண்டதும் அவர்களில் சிலர் எச்சரிக்கை மணியை அடிக்க முயன்றனர். அதற்குள் துப்பாக்கி முனையில் மிரட்டி, பணத்தை கொள்ளையர்கள் அள்ளினர்.

பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ. 1.19 கோடி என வங்கியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த 18 மாதத்தில் நடந்துள்ள 13 வது வங்கிக் கொள்ளை சம்பவம் இது என்று கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

News Express Tamil

Related post