கோவையில் அரிவாளை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

 கோவையில் அரிவாளை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை மாவட்டம் காந்திமா நகர் பகுதியில், அருவாள் முனையில், 500 பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை  மேட்டுப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர்  இளங்கோ(40). இவர்  நேற்று காந்திமாநகர் பகுதியிலுள்ள இறைச்சிக் கடை அருகே வந்து கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து அவரிடமிருந்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என இளங்கோ மறுக்கவே உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் வைத்து அவரது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு இதனை வெளியில் சொன்னால், உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு, அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிவாளை காட்டி பணம் பறித்து சென்ற நபர் காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின்  மகன் மணிகண்டன் என்கிற ஒர்க் ஷாப் மணிகண்டன் (23) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

News Express Tamil

Related post

error: Content is protected !!