முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான 21 இடங்களில் ரெய்டு: அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக புகார்

 முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான 21  இடங்களில் ரெய்டு: அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக புகார்

அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கரூர் மற்றும் சென்னையில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரது உறவினர், நண்பர்கள் வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது. கரூர் தோரணக்கல்லபட்டில், விஜயபாஸ்கர் ஆதரவாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஏகாம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

News Express Tamil

Related post