கோவையில் இறந்தவரின் உடலை தர மறுக்கும் தனியார் மருத்துவமனை : பாதிக்கபட்டவரின் மனைவி சுகாதார துறைக்கு கடிதம்

 கோவையில் இறந்தவரின் உடலை தர மறுக்கும் தனியார் மருத்துவமனை : பாதிக்கபட்டவரின் மனைவி சுகாதார துறைக்கு கடிதம்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ்(40).இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிக்கபட்டு அவினாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார்.முன் பணமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்திபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார்.

இறந்தவரின் உடலை தர எட்டு லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என KMCH மருத்துவனை நிர்வாகம் கூறியதாகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த தங்களால் அவ்வளவு பணம் தர இயலாது என அருண்பிரகாஷ் மனைவி தெதிவித்துள்ளார்.
பணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே உடலை தர முடியும் என மருத்துவமனை தரப்பில் சொல்லபட்டதால் வேறு வழியின்றி தனக்கு உதவிட வேண்டும் என வலியுறுத்தி சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

News Express Tamil

Related post