பெரம்பலூர் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மாந்த்ரீக பூஜை – 20 அடி குழி தோண்டிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை..!

 பெரம்பலூர் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மாந்த்ரீக பூஜை –  20 அடி  குழி தோண்டிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை..!

பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி மாந்த்ரீக பூஜைசெய்து வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழிதோண்டிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (39).ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுதது பிரபு புதையலை எடுப்பதற்காக முயற்சித்து நண்பர்கள் மூலம் அதற்கானவர்களை தேடியுள்ளார். அப்போது பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது.

அதைத் தொடந்து ஐஸ் வியாபாரி பிரபு, பூசாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேர் புதையலை எடுப்பதற்காக மாந்த்ரீக பூஜை செய்துள்ளனர்.

பின்னர், வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக இரவு பகலாக 20 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அருகாமையில் உள்ளவர்கள், புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்ற போலீசார் புதையலுக்காக குழிதோண்டிருந்த 7 பேரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். புதையலுக்காக நரபலி போன்ற விபரீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரபுவின் மனைவி செல்வி உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

News Express Tamil

Related post