கொரோனாவால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய வெளியாள்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்: கோவை மாநகராட்சி அதிகாரி அறிவுறுத்தல்

 கொரோனாவால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய வெளியாள்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்: கோவை மாநகராட்சி அதிகாரி அறிவுறுத்தல்

கொரோனாவால் உயிரிழந்தவா்களைத் தகனம் செய்ய வெளிநபா்களை நம்பி மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக, மாநகரப் பகுதிகளில் 12 மின் மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்ய, மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வெளிநபா்கள் இறந்தவா்களின் உறவினா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பீளமேடு பகுதியில் உள்ள மயானங்களில் உடல் தகனம் செய்ய வருகின்ற மக்களிடத்தில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறாா்கள். பின்புதான் பணம் வசூலித்தவா்கள் மாநகராட்சி ஊழியா்கள் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, ஒவ்வொரு மயானத்துக்கும், ஒரு மாநகராட்சி ஊழியரை இப்பணிக்காக தனியாக நியமித்து, ஒவ்வொரு உடலுக்கும் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது, தொகைக்கான ரசீது வழங்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பில் இருந்து புகார் எழுந்தது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய 12 மின் மயானங்களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளி நபா்களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. உடல்களை தகனம் செய்ய கூடுதல் பணம் கேட்பவா்கள் மீது அந்தந்த மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கலாம். ஏமாற்றும் நபா்கள் கண்டறிப்பட்டால், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

News Express Tamil

Related post