பெற்ற மகளை தேவதாசியாக மாற்ற முயன்ற பெற்றோர்: போலீசார் விசாரணை

 பெற்ற மகளை தேவதாசியாக மாற்ற முயன்ற பெற்றோர்: போலீசார் விசாரணை

கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள சின்சோடி கிராமத்தில் 20 வயதான தீபிகா என்ற பெண் தன்னுடைய தாயாரோடு வசித்து வந்தார் . அப்போது அந்த பெண்ணை அவரின் தாயார் அவரின் சகோதரியின் கணவருக்கு மறு கல்யாணம் செய்து வைக்க அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை .அதனால் அவரை தேவதாசியாக மாற்ற திட்டமிட்டுள்ளார் .அதனால் பயந்து போன

அந்த பெண் யாத்கீர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தப்பி ஓடிவிட்டார், பின்னர் அந்த உறவினர்கள் அந்த பெண்ணை அங்கும் தேடி வந்துவிடுவார்களென்று பயந்த அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அவரின் பெற்றோர் மீது புகார் கொடுத்தார் .அவரளித்த புகாரில் தன்னை தேவதாசியாக தாயார் மாற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளார் .ஆனால் போலீசார் அவரின் பெற்றோரிடம் கேட்டதற்க்கு அவர்கள் அந்த பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவருக்கு தாங்கள் கல்யாணம் செய்து கொடுக்காத கோபத்தில் இப்படி தங்கள் மீது அபாண்டமாக பழி போடுவதாக கூறினார் . இருந்தாலும் அந்த பெண்ணிடம் போலீசார் கேட்ட போது , தான் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்பவில்லையென்றார்.அதனால் அவரை அங்குள்ள ஒரு பெண்கள் சமூக அமைப்பிடம் ஒப்படைத்து அவர்கள் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர் .மேற்கொண்டு போலீசார் அந்த பெற்றோரை விசாரித்து வருகின்றனர்

News Express Tamil

Related post