மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
ஒட்டன்சத்திரம்- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், மக்காச்சோளம் ஏலம்..!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை நாகனம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் மக்காச்சோளம் ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டை தேங்காய் உற்பத்தி குவின்டால் வரத்து அதிகபட்சமாக ரூபாய் கிலோ 9.08க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூபாய் 8க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் மக்காச்சோளம் வரத்து 113 . 63 குவிண்டால் வரத்து வந்தது. அதிகபட்சமாக ரூபாய் 1760 க்கும் குறைந்தபட்சமாக 1650 க்கும் ஏலம் போனது. இந்நிகழ்வில் உடன் இளநிலை உதவியாளர் இந்துமதி ,மண்டி ஆய்வாளர் அசோக்குமார், பணியாளர்கள் நாட்ராயன் ,நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்…