ஆன்லைனில் ஒரே ஒரு பீர் ஆர்டர் ரூ.58,400 எளிமையாக சுருட்டி மோசடி : முதியவருக்கு நேர்ந்த கதி.!!

 ஆன்லைனில் ஒரே ஒரு பீர் ஆர்டர் ரூ.58,400 எளிமையாக சுருட்டி மோசடி : முதியவருக்கு நேர்ந்த கதி.!!

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆன்லைனில் பொருட்களை தேடும் முன்பு அது நம்பிக்கைத் தன்மையான தளமா? அல்லது பாதுகாப்பு வசதி உள்ளதா? என அனைத்தையும் விவரமாக பார்க்க வேண்டும். இல்லையெனில் நமக்கு தான் நஷ்டம் ஏற்படும்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த 61-வயதான முதியவர் ஒருவர் ஆன்லைன் மூலம் பீர் வாங்குவதற்காக முயற்சித்த போது அவருடைய
வங்கிக் கணக்கில் இருந்த 58,400 ரூபாயை இழந்திருக்கிறார்.

அதாவது அந்த மோசடி நடந்தததே தெரியாமல் அந்த முதியவர் அடுத்த நாள் வங்கிக்கு பாஸ்புக்கை அப்டேட் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது தான் அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 724 ரூபாய் மட்டுமே இருந்தது எனத் தெரியவந்துள்ளது.

அதன்பின்பு தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார். வெளிவந்த தகவலின்படி, கடந்த ஜூலை 16-ம் தேதி அந்த 61 வயது முதியவர் கூகுளில் தளத்தில் தேடி மும்பை Kemps corner பகுதியில் இருந்து மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்துள்ளார்.

குறிப்பாக ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள், என பல பெயர்களில் தங்களுடைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவர் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.

அந்தசமயம் எதிர்முனையில் கடையின் ஊழியர் போல பேசிய அந்த மோசடி நபர் பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி அந்த முதியவரின் வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அதன் மூலம் 58,400 ரூபாயை எளிமையாக சுருட்டிவிட்டார்.

அடுத்தநாள் வங்கிக்கு சென்றபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த முதியவர் உடனே கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தியாவில் சமீபத்தில் இது போன்ற ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது. எனவே ஆன்லைன் மூலம்
பொருட்கள் வாங்கும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

News Express Tamil

Related post