300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் கொட்டகைகளை அகற்ற உத்தரவு : சிவன் பக்தர்கள் போராட்டத்தில் பரபரப்பு

 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் கொட்டகைகளை அகற்ற  உத்தரவு : சிவன் பக்தர்கள் போராட்டத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலின் வடக்குப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று அங்கிருந்த சிவன் பக்தர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் நாள்தோறும் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் இதனால் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் கொட்டகை அமைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

அதற்கு அதிகாரிகள் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் இந்த கொட்டகை அமைக்கபட்டுள்ளது என கூறியுள்ளனர். இதில் வாரம் தோறும் நடைபெறும் மாட்டு சந்தை மற்றும் காய்கறி சந்தைக்கு இந்த கொட்டகை இடையூறாக இருக்கும் எனவும் அதனால் இதை அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சிவன் பக்தர்கள் அந்த கொட்டையை அகற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அலுவலர் மல்லிகா அங்கிருந்து பேரூராட்சி பணியாளர்களிடம் கொட்டகைகளை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி பணியாளர்கள் கொட்டகை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சிவன் பக்தர்கள் கொட்டையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என கூறிய பின் அதனை ஏற்ற சிவன் பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப் பட்டுள்ளது.

News Express Tamil

Related post