பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது. இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஆனது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பயன் பெறும். இன்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை பாசனப்பகுதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். திறந்துவிடப்பட்ட தண்ணீர் காலிங்கராயன் வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்து அதற்கு மலர்தூவி விவசாயிகள் மரியாதை செலுத்தினர். இதனால் விவசாயிகள் கரும்பு, வாழை,மஞ்சள், நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும்.

News Express Tamil

Related post