நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது- 7 பேருக்கு வலைவீச்சு..!

 நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது- 7 பேருக்கு வலைவீச்சு..!

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணுவாய்ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து காரமடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் நெல்சன்,காவலர் சுரேஷ்,தனிப்பிரிவு காவலர் விவின் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் கணுவாய்ப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் உள்ள தெற்குத்தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் கார்த்திக் (வயது 29 ) என்பதும்,சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிய வந்தது.இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.மேலும்,இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பின்னர்,அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவன் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!