கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து கடை ஆக்கிரமிப்பு: கடையை மீட்ட கோட்டாச்சியர், பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு

 கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து கடை  ஆக்கிரமிப்பு: கடையை மீட்ட கோட்டாச்சியர்,    பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு

கோவை துடியலூரில் இயங்கி வரும் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஓப்பந்தம் ஏதும் இல்லாமலும், வாடகை ஏதும் செலுத்தாமலும், உள் வாடகை அடிப்படையில் ஒரு தனியார் மருந்துக்கடை இயங்கி வந்தது.

இது தொடர்பாக கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே வாடகை தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கடை நடத்தி வந்தவர்கள் தெரிவித்த நிலையில், உரிய ஆவணங்களை சமர்பித்து கடைக்கு வைக்கப்பட்டுள்ள சீலினை அகற்றி கொள்ளலாம் என கோட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கடை நடத்தி வந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாதைத் தொடர்ந்து இன்று கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் முன்னிலையில் கடைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு கடையில் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு கடையினை காலி செய்து டியூகாஸ் கூட்டுறவு நிறுவனத்திடம் ஒப்படைத்தார். முன்னிலையில் கடையினை காலி செய்யும் போது கூட்டம் அதிகமானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News Express Tamil

Related post

error: Content is protected !!