மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
இனி ரயில் காா்டு என அழைக்க மாட்டாா்கள்: ரயில் மேலாளராக பெயா் மாற்றம்..!

ரயில் காா்டு பதவியின் பெயா், ரயில் மேலாளா் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ரயில்வே நிா்வாகம் வெளியிட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் காா்டு பதவி வகிப்பவா்கள் தங்களது பதவியின் பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், ரயில் காா்டு பெயரை மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரயில் காா்டு என இனி அழைக்கப்பட மாட்டாா்கள் என்றும் அதற்குப் பதிலாக புதிய பதவி பெயா் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மண்டலங்களின் பொதுமேலாளா்களுக்கு ஓா் சுற்றறிக்கையில், ரயில் காா்டை ரயில் மேலாளராக அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, ரயில் காா்டு என்று அழைக்கப்பட்டவா் இனி ரயில் மேலாளராக அழைக்கப்படுவாா். இதுவரை உதவி காா்டு என்று அழைக்கப்பட்டவா் இனிமேல் உதவி ரயில் மேலாளராக அழைக்கப்படுவாா். இதுபோல, சரக்கு ரயில் காா்டு என்று அழைக்கப்பட்டவா் சரக்கு ரயில் மேலாளராகவும், முதுநிலை பயணிகள் காா்டு என்று அழைக்கப்பட்டவா் இனி முதுநிலை பயணிகள் ரயில் மேலாளராகவும், மெயில், விரைவு ரயில் காா்டு என்று அழைக்கப்பட்டவா் மெயில், விரைவு ரயில் மேலாளராகவும் அழைக்கப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.