கோவையில் அடுத்தடுத்து 6 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை :ஐஸ்கிரீம் டீலர் வீட்டில் 50 பவுன் தங்கம்,வைர நகைகள் கொள்ளை..!

 கோவையில் அடுத்தடுத்து 6 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை :ஐஸ்கிரீம் டீலர் வீட்டில் 50 பவுன் தங்கம்,வைர நகைகள் கொள்ளை..!

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). ஐஸ்கிரீம் டீலர். இவர் அந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டில் உள்ள முதல் மாடியில் அறையில் தூங்க சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகை, ரூ.1.30 கோடி மதிப்பிலான 4 வைர நெக்லஸ்களை கொள்ளையடித்து சென்றனர்.மேலும் அந்த பகுதிகளில் உள்ள 6 வீடுகளிலும் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு எந்த பொருளும் திருடு போகவில்லை.இந்த நிலையில் காலையில் எழுந்த சீனிவாசன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அறையில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரளை மேற்கொண்டு வருகிறார்கள்.

News Express Tamil

Related post

error: Content is protected !!