இந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மேட்டுப்பாளையத்தில் பெரும் பதற்றம்..!

 இந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்:  மேட்டுப்பாளையத்தில் பெரும்  பதற்றம்..!

மேட்டுப்பாளையம் இந்து முன்னணி நிர்வாகி மீது மர்மநபர்கள் தாக்குதல். மேட்டுப்பாளையம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை.

மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர்,டிஐஜி முத்துச்சாமி,எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தீவிர ஆலோசனை. அசம்பாவிதங்களை தவிர்க்க 15 இடங்களில் போலீஸார் குவிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி மேற்கு நகர செயலாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் இன்று மாலை ஓடந்துறை நரிப்பள்ளம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது,அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் மழைக்கோட்டை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென சந்திரசேகர் வந்த வாகனத்தை மறித்து இரும்பு ராடால் சராசரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதில் சந்திரசேகருக்கு கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் உடனடியாக கோவை எஸ்.பி.திரு. செல்வநாகரத்தினத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக நேரில் வந்து தாக்குதல் சம்பவம் குறித்து சந்திரசேகரிடம் விசாரணை நடத்தினார். மேலும்,இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,டிஐஜி முத்துச்சாமி,எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பதற்றத்தை தணிக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாருடன் ஆயுதப்படை போலீஸார் 15 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர.இதனால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது…

News Express Tamil

Related post

error: Content is protected !!