போதையில் ரோட்டில் தூங்கிய தொழிலாளியிடம் நகை,பணம் பறித்த மர்ம நபர்-போலீசார் விசாரணை..!

 போதையில் ரோட்டில் தூங்கிய தொழிலாளியிடம் நகை,பணம் பறித்த மர்ம நபர்-போலீசார் விசாரணை..!

தேனி மாவட்டம் சின்னமானூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). தங்க நகை தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கோவைக்கு வந்தார். பின்னர் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் பஸ் நிலையத்துக்கு வந்த அவர் அங்கே படுத்து தூங்கி விட்டார். இதனை நோட்மிட்ட யாரோ மர்மநபர் கண்ணன் போதையில் தூங்கிய போது அவர் கைப்பையில் வைத்து இருந்த 2.5 பவுன் தங்க வளையல், 3.5 பவுன் தங்க கட்டி. ரூ.9,500 பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!