கடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடி செய்த தாய், மகள் கைது..!

 கடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடி செய்த தாய், மகள் கைது..!

கோவையில் கடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் ராஜன்நகரை சேர்ந்தவர் கீதா(38). இவர் கோவை காட்டூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை காட்டூர் ராம்நகர் நஞ்சப்பன் தெருவில் எனது பெற்றோர் வசித்து வருகின்றனர். இருவரும் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்க வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது எனக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த மேரி அவரது மகள் ஜூலியானா ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். இந்நிலையில், எனது பெற்றோரின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அதற்கு மேரி மற்றும் அவரது மகள், வங்கியில் நகை கடன் வாங்கி தருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எனது தாயை வங்கிக்கு அழைத்து சென்ற அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.8.8 லட்சம் மற்றும் நகைக்கடன் பெற வாங்கிய 22 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் காட்டூர் போலீசார் ராம்நகர் நஞ்சப்பன் தெருவை சேர்ந்த மேரி அவரது மகள் ஜூலியானா ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!