பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சர்.!!

 பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சர்.!!

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பத்திரிகை மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி சிப்பத்தை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

முன்கள பணியாளர்களான பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிட கோரி, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க செயலாளர் ஜீவா தங்கவேல், தலைவர் ரமேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு தலா 25 கிலோ அரிசி சிப்பம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் இலவசமாக அரிசி சிப்பத்தை வழங்கினார்.

News Express Tamil

Related post