கோவையில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர்: என்.ஐ.பி போலீசாரால் அதிரடி கைது

 கோவையில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர்: என்.ஐ.பி போலீசாரால் அதிரடி கைது

வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யபடுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவிக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சிங்காநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் TN 38 CL 2853 என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்த நபர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ்(44) என்பதும் ஆந்திர மாநிலத்தில் விற்பனைக்காக 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post