அதிவேகமாக பைக்கை ஓட்டியவர்களை தட்டி கேட்டவருக்கு அடி உதை

 அதிவேகமாக பைக்கை ஓட்டியவர்களை தட்டி கேட்டவருக்கு அடி உதை

கோவை சூலூர் தேர் வீதி பகுதியை  சேர்ந்தவர் மகேஸ்வரன் ( 22 ).தொழிலாளி. நேற்று இவர் தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக அதிவேகமாக  சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த மகேஸ்வரன் அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டார் . அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மகேஸ்வரனை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.சூலூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கருப்பு போயர் வீதியைச் சேர்ந்த கார்த்திக் (22 ) அவரது நண்பர் புவியரசன் ( 20) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர் விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!