கேரள தங்க கடத்தல் விவகாரம்: மூன்று பேரிடம் N.I.A விசாரணை

 கேரள தங்க கடத்தல் விவகாரம்: மூன்று பேரிடம் N.I.A விசாரணை

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றன. கிலோ கணக்கில் தங்கம் அரபு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்நிலையில் இது தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக் கின்றனர். எர்ணாகுளத்தில் சார்ந்த என் ஐ ஏ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கோவையில் தங்க பட்டறை உரிமையாளர் நந்தகுமார் வீட்டில் சோதனையிட்டு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் அடிப்படையில் கடத்தல் தங்கத்தை நகையாக மாற்றும் பணியை இவர் செய்தது தெரியவந்தது. தேசிய முகமை அதிகாரிகளின் தொடர் விசாரணையின் அடிப்படையில் தங்க நகைகளை மாற்றப்பட்டு அதனை விற்பதற்கு கோவை பெரியகடை வீதி சேர்ந்த 3 பேர் உதவியதாக தெரியவந்தன. அதன் அடிப்படையில் பெரிய கடை வீதியில் உள்ள மூன்று பேர்களை பிடித்த தேசிய முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்

News Express Tamil

Related post

error: Content is protected !!