மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை பிடித்து;கார்த்திக் முதலிடம்.!!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது .
அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ந் தேதி அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாற்றுக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, (ஐன. 17) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகளில் 1,020 காளகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 18 காளைகளை பிடித்த அலங்கா நல்லூரை சேர்ந்த ராம்குமார் 2-ம் இடம் பிடித்தார். சித்தாலங்குடி கோபால கிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்தார்.