கண் இமைக்கும் நேரத்தில் பறக்கும் கார்கள் அறிமுகம்: ஆராய்ச்சி நடத்திய மோட்டார் குழுமம்.!!

 கண்  இமைக்கும் நேரத்தில் பறக்கும் கார்கள் அறிமுகம்: ஆராய்ச்சி நடத்திய மோட்டார் குழுமம்.!!

பென்டகன் மோட்டார் குழுமமானது பறக்கும் கார் பற்றி ஆராய்ச்சி நடத்தி அதனை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பறக்கும் காரை பற்றி பென்டகன் மோட்டார் குழுமம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஒரு பறக்கும் காரை வாங்குதல், பயன்படுத்துதல் போன்றவை ஆடம்பரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது வருங்கால ரீடைல் விலை, பறக்கும் உரிமம் பெறுவதற்கான தொகை, காப்பீடு, ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த பறக்கும் காரை சொந்தமாக வாங்குவதற்கு அமெரிக்கா பணமதிப்பில் சுமார் 742,498 டாலர் செலவாகும். மேலும் முதன்முதலில் இந்த பறக்கும் கார்கள் சந்தையில் அறிமுகம் ஆகும்போது அதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாயாக இருக்கும்.

இந்த தொகையானது காரின் அடக்கவிலை மட்டுமின்றி எரிபொருள் பயன்பாடு, கார் பயிற்சி கட்டணம், காப்பீடு, பார்க்கிங் கட்டணம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். இதற்கு உரிமம் பெறுவதற்கு 37,19௦ டாலர் செலவாகும். இந்த பறக்கும் கார்கள் ஓட்டும் முன்னனுபவம் இல்லாதவருக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றால் அவரின் காப்பீட்டுத்தொகை 17,810 டாலராகும். இதனை அடுத்து பறக்கும் காரை உரிமையாக்கி கொள்ள ஆகும் விலை 693000 டாலர் செலவாகும். நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட PAL – V மாடல் பறக்கும் காரானது வரும் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துதலில் முதல் காரக இருக்கலாம். இந்த வகை கார்கள் சாதாரண ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி இருப்பினும் இமைக்கும் நேரத்தில் பறக்கும் வாகனமாக மாறிவிடும்…

News Express Tamil

Related post