கோவையில் வீட்டிலேயே குக்கர் வைத்து சாராயம் காய்ச்சிய கொரொனா நோயாளி-போலீசாரிடம் வசமாக சிக்கினார்…

 கோவையில் வீட்டிலேயே குக்கர் வைத்து சாராயம் காய்ச்சிய கொரொனா நோயாளி-போலீசாரிடம் வசமாக சிக்கினார்…

!கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். விவசாயியான இவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். அவரது வீட்டை சுற்றி சுகாதார துறையினர் தகரம் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சம்பத்குமார் சாராயம் காய்ச்சுவது எப்படி என பார்த்துள்ளார். பின்னர் யூ டியுபில் பார்த்து வீட்டில் இருந்தபடியே சாராயம் காய்ச்சியுள்ளார். கேஸ் ஸ்டவ் வைத்து அதில் இரு பெரிய குக்கர்களை கொண்டு சாராயம் காய்ச்சியுள்ளார். இந்நிலையில் சாராய வாடை வருவது குறித்து அந்த பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆலாந்துறை காவல் நிலைய போலீசாரும் மது விலக்கு போலீசாரும் சம்பத்குமாரின் வீட்டில் சோதனையிட்ட போது வீட்டில் பெரிய டிரம்களில் 1200 லிட்டர் சாராய ஊறல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 10 லிட்டர் சாராயம் , 90 பாட்டில்கள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் போன்றவை இருந்த நிலையில் அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம்பத்குமார் கொரொனா நோயாளி என்பதால் அவரை கைது செய்யாத போலீசார் அவர் தனிமைபடுத்துதல் சிகிச்சை முடியும் வரை தொடர்ந்து அவரை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட விவசாயி யூ டியூப் பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

News Express Tamil

Related post