கோவையில் மட்டன் வாங்கினால் குடம் இலவசம்: ஆஃபரில் ஆட்டுக்கறி விற்பனை – பொதுமக்கள் வரவேற்பு

 கோவையில் மட்டன் வாங்கினால் குடம் இலவசம்: ஆஃபரில் ஆட்டுக்கறி விற்பனை – பொதுமக்கள் வரவேற்பு

கோவை, சூலூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் “அம்மா அப்பா” என்ற பெயரில் ஆட்டு கறி கடை துவங்கப்பட்டுள்ளது இந்த கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் தென்மாவட்டங்களில் செய்வது போன்று ஆட்டுக்கறி வாங்கினால் குடம் மற்றும் தேங்காய் ஆகியவை ஆட்டுக்கறி வாங்கும் பொது மக்களுக்கு இலவசமாக ஒரு மாத காலம் வழங்கப்படுவதாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கறிக்கடையில் ஆட்டு கறி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதில் ஒரு கிலோ ஆட்டுக்கறி 560 ரூபாய்க்கும், தலைக்கறி 180 ரூபாய்க்கும் நாட்டுக்கோழி 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய மட்டன் கடைக்காரர் பொதுமக்களை கவரும் விதமாக விளம்பர போஸ்டர்கள் ஒட்டியதாகவும் வாடிக்கையாளர்கள் இதனை பார்த்துவிட்டு பல்வேறு இடங்களில் வந்து கறி வாங்கி செல்வதாகவும், தரமான கறிகள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் பேசும்போது இதுபோன்று மதுரை மாவட்டங்களில் இலவச பொருட்கள் கொடுத்து விற்பனையானது நடைபெறும்

கோவையில் இதுபோன்று விற்பனை நடைபெறுவது வரவேற்கக் கூடியதாக உள்ளது மேலும் மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாக உள்ளதால் தொடர்ந்து இதுபோன்று தொடர்ந்து குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

News Express Tamil

Related post