4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி கைது

 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் தேவராஜ் என்பவர் தனது வீட்டின் அருகில் வசித்து வரும் தம்பதியினரின் 4 வயது குழந்தை நேற்று மாலை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தது

அப்பொழுது அங்கு வந்த தேவராஜ் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்றார். அங்கு சென்ற பின்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்

இதனால் சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார் எனவே இதனைத் தொடர்ந்து அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமிகள் சத்தமிட்டனர்

அதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தேவராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

பின்னர் இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவம் குறித்து சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்

பின்னர் வழக்கு குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர் நேற்று நள்ளிரவு தவிட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து வீட்டில் பதுங்கியிருந்த தேவ ராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post