கோவையில் பெண் காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..!

 கோவையில் பெண் காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..!

கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ரேணுகா(36). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரேணுகா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!