காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல்:வேறு திருமணம் செய்து ஏமாற்றியதால் – வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

 காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல்:வேறு திருமணம் செய்து ஏமாற்றியதால் – வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே வரதராஜபுரம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(45). இவர் பெயிண்டர். இவருக்கு செண்பகவல்லி(34) என்ற மனைவியும் 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை பொன்னுரங்கம் வேலைக்கு சென்றார். இந்நிலையில், காலை 11 மணியளவில் தான தற்கொலை செய்து கொள்ளப்போகதாகவும் அதற்கு தங்கயைின் கணவர் ஜோசப் தான் காரணம் என்றும் செண்பகவல்லி வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு அனுப்பியிருக்கிறார். இதை கண்டதும் பொன்னுரங்கம் பதறிப்போய் வீட்டுக்கு ஓடியுள்ளார். அங்கு படுக்கை அறையில் செண்பகவல்லி மின்விசியில் தூக்கிட்டு உயிரிழந்து கிடப்பதை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடிரைந்த போலீசார் செண்பகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் செண்பகவல்லியின் தங்கை லாவண்யா(28) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 2வது குழந்தை பிறந்தபோது உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு இவர்கள் கணவர் ஜோசப்(33). மகன் ரோகித் (6) ஆகியோர் செண்பகவல்லியின் வீட்டி மாடியில் குடியிருந்து வந்தனர். அப்போது, செண்பகவல்லிக்கும் ஜோசப்புக்கும் கள்ளக்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செண்பகவல்லிக்கு தெரியாமல் அமிர்தா என்ற பெண்ணை ஜோசப் திருமணம் செய்திருக்கிறார். அதனால், கள்ளக்காதலன் கைவிட்டதில் மனமுடைந்த செண்பகவல்லி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து ஜோசப்பை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post