மண்ணுளியன் பாம்பு கடத்தல்: 3 பேரை காவல்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

 மண்ணுளியன் பாம்பு  கடத்தல்: 3 பேரை காவல்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனைச்சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு மண்ணுளியன் பாம்பு பறிமுதல் மேலும் கொண்டு சென்ற வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் ஆகியோரை காவல்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . மேலும் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனை சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காரில் மண்ணுளியன் பாம்பு மறைத்து கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காவல்துறையினர் மண்ணுளியன் பாம்பை பறிமுதல் செய்தனர் மேலும் காரில் வந்த வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் உள்ளிட்ட 3 பேரை பிடித்து ராசிபுரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் . 3 பேரையும் மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் ராசிபுரம் வனஅலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணுளிப்பாம்புபை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாத்திரப்படி ராசி என்றும், இந்த பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாக்சம் பெருகும் என்றும் அதற்காக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்குவதால் இன்றளவில் இந்த மண்ணூழி பாம்பை கடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!