இரட்டை கொலை வழக்கு: 8 பேர் மீது குண்டர் சட்டம் – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 இரட்டை கொலை வழக்கு: 8 பேர் மீது குண்டர் சட்டம் – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை, சூலூர் அடுத்த பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் கஞ்சா வியாபாரி இவருக்கும் சிங்கநல்லூர் கக்கன் நகரைச் சேர்ந்த உறவினர் வசந்தகுமார் என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தகுமார் வசந்தகுமாரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனையடுத்து வசந்தகுமாரின் நண்பர்கள் மகேஷ்குமார் உள்ளிட்ட இரண்டு பேருடன் ஆனந்தகுமார் வீட்டுக்கு சென்று தகராறு குறித்து தட்டிக்கேட்டுள்ளனர்,

அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், சரவணன், ஆகியோர் வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்,

இதில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயமடைந்த மகேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனையடுத்து சூலூர் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்,

இந்நிலையில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை வழங்கியிருந்தார், அதன் பேரில் சரவணன்(23), சதீஷ்குமார்(21), ஆனந்தன்(47), ஹரிகிருஷ்ணன்(24), பிரபு(23), தினேஷ்(20), அஸ்வின்(17), ஸ்ரீநாத்(21) ஆகிய 8 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் உத்தரவிட்டார், அதன்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு நகல்கள் அவர்களுக்கு சிறையில் வழங்கப்பட்டதாக சூலூர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Express Tamil

Related post