மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
அலுவலகங்களில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் – அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஸ்மார்ட் போன் இன்றியமையாததாகிவிட்டதால், இந்த தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட் போனுக்குள்ளே உலகமே அடங்கி போய் விட்டது என்று சொல்லும் அளவுக்கு டெக்னாலஜி உள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற செயலிகள் வாயிலாக, நாம் தினமும் புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கிய கோப்புகள் என பலவற்றை பகிர்ந்து வருகிறோம். இதில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு ஆபத்தும் உள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சமூக வலைதளங்களை அதிகாரப்பூர்வமாக குரூப் ஆரம்பித்து பயன்படுத்தி வருகிறது. எனினும் ஒருசில தனியார் நிறுவனங்களின் ஆப்கள் (செயலி) மூலம் தனிநபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம். இது போன்ற செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.